விஜய், அஜித் ரசிகர்களை கண்டால் மனதிற்கு கஷ்டமாக உள்ளது- விஜய் சேதுபதி


தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட இளம் நடிகர் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டைப்போடுவது குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் நடிகர்கள் விஜய் சேதுபதி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளிக்கையில் ‘ரசிகர்கள் இரண்டு நடிகர்களுக்காக சண்டைப்போடுவது மனதிற்கு சங்கடமாக உள்ளது.

குடும்பம் வரை இழுத்து மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர், இதே ஆர்வத்தை ஒரு அரசியலில் காட்டலாம், என்னை பொறுத்துவரை ஒவ்வொரு இளைஞனும் 18வயது வந்தவுடன் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும்’ என ஆதங்கத்துடன் கூறினார்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment