விக்ரம் தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் இருமுகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, நித்யா மேனன் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடந்து முடிந்தது, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. இதில் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை எடுக்கவுள்ளனர். இதற்காக பெரிய சுரங்கம் ஒன்றை செட் அமைத்து வருகிறார்கள்.
சுரங்க அரங்கினை 'க்ரிஷ் 3' படத்துக்கு கலை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் செல்வராஜ் அமைத்திருக்கிறார். சண்டை வடிவமைப்பை 'ஜெய் ஹோ' படத்துக்கு சண்டை வடிவமைப்பாளராக பணியாற்றிய ரவி வர்மா அமைக்கவுள்ளார்.

0 comments:
Post a Comment