இறுதிச்சுற்று படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்ற பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் புதுவிதமாக இயக்குனர் சுதா, சென்னை நொச்சிக்குப்பத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அப்பகுதி மக்கள் ‘எங்கள் இடத்தில் இதுவரை எத்தனையோ பேர் ஷுட்டிங் நடத்தியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்தால் எங்களை யாரும் கண்டுக்க கூட மாட்டாங்க.
எங்களிடமே மீன் வாங்கி சாப்பிடுவார்கள், அதுக்கு பணம் கூட கொடுக்க மாட்டார்கள். ஆனால், இவர் இன்னும் எங்களை நியாபகம் வைத்து பார்க்க வந்தது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது’ என கூறுகின்றனர்.

0 comments:
Post a Comment