இன்று வெள்ளிக்கிழமை ஜெயம் ரவி நடித்த மிருதன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த சேதுபதி ஆகிய இரு படங்கள் வெளியாகின்றன.
ஜெயம் ரவிக்கும் விஜய் சேதுபதிக்கும் இந்த இரண்டுமே முக்கியமான படங்கள்.
தனி ஒருவன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் படம் மிருதன். தனி ஒருவன் மட்டுமல்ல, 2015-ல் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த எல்லா படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்தவைதான். 
எனவே அந்த வெற்றிகளைத் தக்க வைக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ரவிக்கு உள்ளது. தமிழில் வெளியாகும் முதல் ரத்தக் காட்டேரி வகைப் படம் இந்த மிருதன். ஒரு மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்தது. 
இதனால் இப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினார்கள். அதில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
நானும் ரெளடிதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து வெளிவரும் படம் சேதுபதி. இந்தப் படத்தில் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. 
ஆக்ஷன் ஹீரோவாக அவருக்கு இது முதல் படம். எனவே இதன் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.
இருவரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள்...? பார்க்கலாம்!



0 comments:
Post a Comment