எப்போதும் புயல் தான் தாக்கும் என்று சொல்வார்கள், ஆனால், இந்த அழகிய சாரல்களால் தமிழகமே ஆடிதான் போய் உள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஆண்ட்ராய்ட் போன் முதல் ஆபிள் போன் வரை கவர் போட்டோவாக அலங்கரிப்பது இவர்கள் தான்.
பெண்கள் பலருக்கும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அவர்களுக்கு டிபியாக (Profile Photo, Display Photo) இருப்பது இவர்கள் தான். அவர்களை பற்றிய சிறு தொகுப்பு உங்களுக்காக
மலர்:
தமிழ் சினிமா இதுவரை எத்தனையோ டீச்சர்களை சந்தித்து இருக்கின்றது, ஆனால், மலையாள படமான ப்ரேமத்தில் வந்த மலர்(சாய் பல்லவி) டீச்சர் போல் வேறு யாரும் இப்படி ரசிகர்களை உலுக்கி போட்டது இல்லை, இத்தனைக்கும் அவர் ஒரு தமிழ் பெண் என்பது பலரும் அறியப்படாத தகவல். தமிழ் சினிமாவை பேய் பிடித்து ஆட்டிய காலத்தில், ரசிகர்களை மலர் பிடித்து ஆட்டியது என்று கூறலாம். முகப்பருவை கூட பாசிட்டிவாக பேசி வாம் வெல்கம் கொடுத்தனர் தமிழக ரசிகர்கள். ஆனால், அவரோ தமிழ் சினிமா பக்கம் திரும்பவே மாட்டேன் என்றுள்ளார்.
செலின்:
தற்போதும் பலருக்கும் இவரது பெயர் என்ன என்பது தெரியாது, இன்றும் செலின் என்று தான் அழைத்து வருகின்றனர். மடோனா செபாஸ்டியன் இது தான் இவரின் நிஜப்பெயர், சார் செலின் சார், கைய்ல ஸ்பூன் வச்சுருக்கு சார், ஐஸ் க்ரீம் சாப்பிடுது சார் என பார்த்திபனிடம் மாட்டிய விவேக் கூட இத்தனை கஷ்டத்தை அடைந்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு செலின் பீவர் தாக்கியது.
மஞ்சிமா:
மஞ்சிமாவா!!! இவர் யார் என்று சினிமா அறியாத பல ரசிகர்கள் கூறலாம், ஆனால், தள்ளிப்போகாதே பாய்ஸிடம் சென்று இவரை தெரியாது என்று சொன்னால், கொலை செய்யவும் தயங்க மாட்டாரகள், மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி படத்தில் அறிமுகமாகி, தற்போது தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்துள்ளார். இன்னும் ஒரு படம் கூட வரவில்லை இவர் நடிப்பில் தமிழில், ஆனால், அடுத்தடுத்த படங்களின் மஞ்சிமா கால்ஷிட் நிரம்பியுள்ளது.
கீர்த்தி சுரேஷ்:
முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர்கள் ஒரு சிலரே, அந்த வகையில் பிரபல நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் தமிழ் ரசிகர்களுக்கு, ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும், இவரின் சின்ன சின்ன க்யூட் ரியாக்ஷனுக்கு தமிழக ரசிகர்கள் மயங்கி தான் விழுந்தனர். சமீபத்தில் வந்த ரஜினி முருகனின் மதுரை பெண்ணாக கலக்கியிருப்பார். ஆஸ்திரேலியா டீமிற்கு ஓப்பனிங் பேட்டிங் கிடைத்தது போல் அடுத்தடுத்த பல படங்களில் அதிரடியாக கமிட் ஆகி வருகின்றார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் 2016 இவர் கையில் தான்.
0 comments:
Post a Comment