தமிழ் சினிமாவில் தற்போது புதுமுக இயக்குனர்கள் தான் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் முழுக்க முழுக்க புது முகங்கள் நடித்து வெளிவந்துள்ள படம் தான் சவாரி.இப்படத்திற்கு ஜில் ஜங் ஜக் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்திருப்பது கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதைக்களம்:
ஆந்திரா மற்றும் தமிழக எல்லை பகுதியில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து சைக்கோ ஒருவனால் பலர் கொல்லப்படுகின்றனர். இந்த கொலைகளை கண்டுப்பிடிக்க பெனிட்டோ நியமிக்கப்படுகிறார்.தன் திருமணத்திற்காக பெனிட்டோ ஆந்திரா செல்லும் வழியில் தன் கார் பழுதாகின்றது. இதை தொடர்ந்து அந்த வழியாக MLA ஒருவர் தன் காரை உதவியாளரிடம் எடுத்து வர சொல்கிறார்.அந்த காரில் லிப்ட் கேட்டு பெனிட்டோ பயணிக்க, அந்த கொலைக்கார சைக்கோவும் அதே காரில் லிப்ட் கேட்டு ஏறுகிறான். இதை தொடர்ந்து இவர்கள் பயணத்தில் என்ன ஆனது? என்பதை சுவாரசியமாக கூறப்பட்டுள்ளது.
க்ளாப்ஸ்:
படத்தில் நடித்த நடிகர்கள் யாருக்கும் முதல் படம் போன்றே தெரியவில்லை மிக யதார்த்தமாக நடித்துள்ளனர்.படம் முழுவதும் வரும் டுவிஸ்ட் ரசிக்க வைக்கின்றது.அந்த சைக்கோ பெனிட்டோ காரில் ஏறிய அடுத்த நிமிடம் பதட்டம் நமக்கு வந்து செல்கின்றது.இவை அனைத்தையும் விட விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை மிரட்டியுள்ளது.
பல்ப்ஸ்:
இரண்டாம் பாதி நீளமாக இருப்பது போல் தெரிகின்றது,முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது.க்ளைமேக்ஸில் சுவாரசியம் இல்லை.நல்ல க்ரைம், த்ரில்லரை விரும்புவர்கள் கண்டிப்பாக ஒரு முறை சவாரி போகலாம்.
ரேட்டிங்: 2.5/5
0 comments:
Post a Comment