கடந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே ஐ என்ற பிரமாண்ட படத்துடன் வெளிவந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த படம் டார்லிங். இப்படத்தின் தொடர்ச்சி என்றில்லாமல் டைட்டிலை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதைக்களத்தில் வெளிவந்துள்ள படம் தான் டார்லிங்-2.அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகர் இயக்கத்தில் கலையரசன், மெட்ராஸ் ஜானி, காளி வெங்கட் இவர்களுடைய நடிப்பில் இளம் டெக்னிஷியன்களின் கூட்டணியில் இந்த படம் வெளிவந்துள்ளது.
கதைக்களம்:
திருமணத்திற்கு முன் வேண்டா வெறுப்பாக பேச்சுலர் பார்ட்டிக்கு வால்பாறை செல்கிறார் கலையரசன். இவருடன் மெட்ராஸ் ஜானி, காளி வெங்கட், கிருஷ்ணா, அர்ஜுன் செல்கின்றனர். இந்த பேச்சுலர் பார்ட்டிக்கு முக்கிய காரணம் ரமீஷ்ஷின் தம்பி மரணம் தான். இவர்கள் கேங்கில் ஒருவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொள்கிறார். இதனால் சோகத்தில் இருக்கும் புதுமாப்பிள்ளை கலையரசன் மனதை மாற்ற பேச்சுலட் ட்ரிப் அடிக்கிறார்கள்.வால்பாறை கெஸ்ட் அவுஸ் சென்றவுடன் ஒரு ஆவியின் ஆட்டம் ஆரம்பிக்கின்றது. அர்ஜுன், காளி வெங்கட், ஜானி என அனைவரையும் அச்சத்தில் உறைய வைக்கின்றது. ஒரு கட்டத்தில் தங்கள் நண்பன் கலையரசன் மீது ஆவி இருப்பது தெரிய வருகின்றது.அந்த ஆவியிடம் நீ யார் என்று கேட்க, நான் தான் உங்கள் நண்பன் ராம்(ரமீஷின் தம்பி) அரவிந்தால்(கலையரசன்) தான் நான் இறந்தேன், எனக்கு அவன் உயிர் வேண்டும் என கேட்கின்றது. கலையரசனை ஏன் பழி வாங்க வேண்டும் இவர் மரணத்திற்கு அவர் எப்படி காரணம், பேய் கலையரசனை சொன்னது போல் பழி வாங்கியதா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்:
இப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களின் கூட்டணியில் உருவாகியுள்ளது. அனைவருமே யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் ஸ்கீரினில் பயப்படும் போது பயம் நம்மையும் சுற்றிக்கொள்கின்றது.விளையாட்டாக நாம் செய்யும் சில விஷயங்கள் ஒருவரின் வாழ்வில் எத்தனை பெரிய மாற்றத்தை உண்டாக்கின்றது என்ற ஒரு சின்ன லைனை எடுத்துகொண்டு 2 மணி நேரம் எடுத்துள்ளார் இயக்குனர் சதீஷ்.ஆனால், இந்த மாதிரி பேய் படங்கள் தொடர்ந்து நாம் காமெடி கலந்து தான் பார்த்து வருகின்றோம். டார்லிங் முதல் பாகமும் அப்படி தான், அந்த எதிர்ப்பார்ப்பு தான் இந்த படத்தில் ஏமாற்றம்.படம் டெக்னிக்கலாக அனைவரையும் கவர்ந்து இழுக்கின்றது. அதிலும் ரதனின் இசை நம்முள் அச்சத்தை கொண்டு வருகின்றது. இருளிலும் சின்ன லைட் வெளிச்சத்தில் ஒளிப்பதிவும் மிரட்டியுள்ளனர்.
க்ளாப்ஸ்:
நடிகர்களின் யதார்த்த நடிப்பு, இதன் பின்னணி இசை, ஒளிப்பதிவும்.படத்தின் முதல் பாதி குறிப்பாக இடைவேளையில் எதற்கு கலையரசனுக்கு பேய் பிடித்துள்ளது என்ற டுவிஸ்ட்.
பல்ப்ஸ்:
ப்ளாஷ் பேக் காட்சிகள் பெரிய அளவில் பாதிக்கவில்லை, காமெடி எந்த இடத்திலும் ஒர்க் அவுட் ஆகவில்லை.முனீஷ்காந்த் கதாபாத்திரம் எதற்கு? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது.மொத்தத்தில் டெக்னிக்கலாக டார்லிங் 1-யை மிஞ்சினாலும் Entertainment-ல் டார்லிங் 1 அளவிற்கு இல்லை.
ரேட்டிங்: 2.75/5
0 comments:
Post a Comment