நாரதன் விமர்சனம்


நகுல் எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். இந்நிலையில் நகுல், நிகிஷா. ப்ரேம்ஜி அமரன், ராதாரவி, சுப்பு அருணாச்சலம், பவர் ஸ்டார் என நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்துள்ள படம் தான் நாரதன்.

கதைக்களம்:

கோவையிலிருந்து வேலைக்காக சென்னையில் இருக்கும் தன் மாமா வீட்டிற்கு வரும் நகுல், நாயகி நிகிஷா பட்டேலை ஒரு சில கும்பல் துரத்துவதை பார்க்கின்றார். பிறகு என்ன வழக்கம் போல் அந்த கும்பலிடம் இருந்து நாயகியை காப்பாற்றுகிறார்.பின் பிரச்சனை இவரை சுற்றுகின்றது, அப்போது நாரதனாக வரும் ஒருவன் நகுலின் தாய்மாமன் குடும்பத்தில் புகுந்து பல கலகங்களை ஏற்படுத்துகிறான்.வில்லன் கும்பலிடம் இருந்து நகுல் தப்பித்தாரா? மாமா குடும்பத்தின் பிரச்சனைகளை தீர்த்தாரா? என்பதை காமெடியாக சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள்.

க்ளாப்ஸ்:

நகுல் வழக்கம் போல் தன் துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் இரண்டாம் பாதியில் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்:

படத்தின் முதல் பாதியில் காமெடி எடுப்படவே இல்லை, எதை நோக்கி படம் செல்கின்றது என்பதே தெரியவில்லை. படத்திற்கு மணிசர்மா தான் இசையா? என கேட்கத்தோன்றுகின்றது.மொத்தத்தில் இந்த நாரதன் செயல் கொஞ்சம் கஷ்டத்திற்கே.

ரேட்டிங்: 1.5/5
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment