உயிரே உயிரே விமர்சனம்


ஹன்சிகாவை மட்டும் நம்பி வெளிவந்துள்ள படம் தான் உயிரே உயிரே. ஜெயபிரதாவின் மகன் சித்து முதன் முறையாக ஹீரோவாக களம் இறங்கும் படம், அனில் கபூர் பாடல் வெளியீட ஆரம்பமே இப்படத்திற்கு அமர்க்களமாக தொடங்கினாலும், படத்தின் எதிர்ப்பார்ப்பு மிகவும் குறைவு தான்.

கதைக்களம்:

தமிழ் சினிமாவின் 75 வருட காலத்து கதை தான், ஹன்சிகாவை பார்த்தவுடன் காதல் வருகிறது, நாளடைவில் ஹன்சிகாவிற்கும் சித்து மீது காதல் வந்து விடுகின்றது.ஒரு கட்டத்தில் சித்துவுக்கு தான் காதலிக்கும் ஹன்சிகா தன் எதிரியான அஜெய்யின் தங்கை என்பது தெரிய வருகிறது. அதைப் போலவே அஜெய்க்கும் இந்த உண்மை தெரிய எதிர்ப்பு வலுவாகின்றது. காதல் திருமணம் என்றாலும் அது இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கும்போது தான் சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்ற கொள்கையுடைய சித்து இருக்கிறார்.இதன் பிறகு எப்படி அனைவரது சம்மதத்துடன் ஹன்சிகாவை மணம் முடிக்கிறார் என்பதே ‘உயிரே உயிரே’.

க்ளாப்ஸ்:

ஹன்சிகா மட்டும் கலர்புல்லாக இருக்கிறார், கிளாமர் கொஞ்சம் தூக்கல் தான். சித்துவும் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு நடித்துள்ளார். ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

பல்ப்ஸ்:

லாஜிக் என்பதே இல்லை, மிகவும் மெதுவாக செல்லும் திரைக்கதை, பாடல்கள் ஏதும் ரசிக்கும்படி இல்லை.மொத்தத்தில் ஹன்சிகா ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.

ரேட்டிங்:2/5
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment