இளைய தளபதி ரசிகர்களின் பலம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவரின் படங்கள் பற்றி எந்த செய்தி வந்தாலும் இந்திய அளவில் எளிதில் ட்ரண்டாகி விடும்.
அந்த வகையில் அவரின் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் அதர்வா நடிப்பில் கணிதன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.இப்படத்தின் இடைவேளையில் தெறி படத்தின் டீசர் ஒளிப்பரப்பவுள்ளதாக கூறப்படுகின்றது. 
இதன் மூலம் ரசிகர்கள் இதற்காகவே இப்படத்திற்கு செல்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

0 comments:
Post a Comment