தமிழ் சினிமாவில் ஆட்டிப்படைக்கும் தலதளபதி


தமிழ் சினிமாவை சமீபத்தில் வரும் படங்களில் நல்ல கதை இருக்கின்றதோ இல்லையோ, தலதளபதி குறித்து ஏதும் புகழும் காட்சிகள் கண்டிப்பாக இருக்கின்றது. ஒரு காலத்தில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் விஜய், அஜித்தே தாங்கள் நடிக்கும் பல படங்களில் ரஜினியை புகழ்ந்து பேசினார்கள்.விஜய் காலப்போக்கில் அரசியல் காரணத்திற்காக எம்.ஜி.ஆர் அவர்களையும் ஒரு சில படங்களில் புகழ்ந்தார். ஆனால், தற்போது விஷயம் அப்படியே தலைகீழ்.

வாரத்திற்கு 5 படம் வந்தால் அதில் 3 படத்தில் விஜய்-அஜித் பெயர்கள் தான் இடம்பெறுகின்றது, இதை வைத்து சமூக வலைத்தளங்களில் பெரிய மூன்றாம் உலகப்போரே நடக்கின்றது. ஒரு தரமான படத்தில் கூட காட்சிக்காக இவர்களில் யாரவது ஒருவரின் பெயரை பயன்ப்படுத்தினால், உடனே எதிர்தரப்பு ரசிகர்கள் ஒன்று சேர்ந்து அந்த படத்தை பற்றி எதிர் மறையான விமர்சனங்களை பரப்புக்கின்றனர்.இன்னும் சிலர் தாங்கள் எடுக்கும் சிறு பட்ஜெட் படத்திற்கு ஒரு ப்ரோமோஷன், விளம்பரத்திற்காக டீசர் அல்லது போஸ்டரிலேயே இவர்கள் புராணம் பாடுகின்றனர். 

இதற்காகவே பல ரசிகர்கள் முதல் காட்சிக்கே இந்த படங்களுக்கு துண்டு போட்டி காத்திருக்கின்றனர்.ஆனால், இதன் பாதிப்பு அறியாமல் சிலர் தங்கள் கதைகளின் மீது நம்பிக்கை இழந்து இப்படி செய்வது வருத்தம் தான் அளிக்கின்றது. இதில் குறிப்பிடும்படி சொல்ல வேண்டுமென்றால், கடந்த வருடம் வெளிவந்த மாஸ் திரைப்படத்தில் விஜய்யின் கத்தி தீம் மியூஸிக்கை சூர்யாவிற்கு பயன்படுத்தி, வீரம் தீம் மியூஸிக்கை மொட்டை ராஜேந்திரனுக்கு பயன்படுத்தியது அஜித் ரசிகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் கோபமாக வெங்கட் பிரபுவை தாக்கி கருத்துக்கள் வெளியிட, அவர் ஒரு கட்டத்தில் ‘ஏண்டா இந்த காட்சியை எடுத்தோம்’ என்ற ரேஞ்சிற்கு வெறுத்துப்போய்விட்டார். 

சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்திற்கு இந்த காட்சிகள் தேவையில்லை தான், ஆனால், அவர் ஈகோ மறந்து இதுப்போல் நடிப்பது ஒரு ஆரோக்கியமே.இதேபோல் ஆர்யா தீவிர அஜித் ரசிகராக நடித்து வெளிவந்த யட்சன், மிகவும் எதிர்ப்பார்ப்பிற்குறிய படமானது, முதல் நாள் இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புல். படத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அஜித் ரசிகர்களே, ஆனால், அஜித் நடித்தால் ஹிட் ஆகும், கதையே இல்லாமல் அஜித், அஜித் என்று சொன்னால் ஒரு படம் ஹிட் ஆகுமா? பெரும் தோல்வி படமாக அமைந்தது.

தற்போது ஒரு தரமான படம் வருகின்றது என்றால், அதில் என்ன மாதிரியான கதை, நடிகர், நடிகைகள் இவரா? பாடல்கள் எப்படி? என்று பார்ப்பதை விட்டு, அனைவரும் தலதளபதி பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்று தான் பார்க்க ஆரம்பித்து விட்டனர். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் எந்த ஒரு Reference-யும் எதிர்ப்பார்ப்பது இல்லை. அதற்கு காக்கா முட்டை, தனி ஒருவன், இறுதிச்சுற்று என பல படங்கள் உதாரணம்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment