ஒரு தாய் போல் என்னை பார்த்துகொண்டவர் இவர் தான்- இறுதிச்சுற்று ரித்திகாவின் உருக்கமான கருத்து


இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் இந்த படத்தில் நடித்ததற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ரித்திகா ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து சில உருக்கமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.இதில் ’இறுதிச்சுற்று கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியின் போது எடுக்கப்பட்ட படம். 

என் கண்ணின் மேல் காயம் போல் மேக்கப் செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தாய் போல இருந்து என்னைப் பார்த்துக்கொண்டவர் தான் ப்ரியா’(புகைப்படத்தில் ரித்திகாவின் அருகில் இருப்பவர்) என கூறியுள்ளார்.

Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment