அஜித் ரசிகர்கள் அவரின் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருடைய மகள், மகன் பிறந்தநாளை கூட போஸ்டர் அடித்து கொண்டாடும் அளவிற்கு அஜித் மீது தீவிர அன்பு கொண்டுள்ளனர்.
அதிலும் மதுரை ரசிகர்கள் அஜித் தும்மினால் கூட அதற்கு போஸ்டர் அடித்து விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் மதுரையை கலக்கு போஸ்டர் இது தான்.அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பைக் ஓட்டி வருவது போல், அவருக்கு பின்னால் அஜித் பைக் ஓட்டி வருகிறார். ‘அப்பா உனக்கு Speed போதாது’ என சொல்வது போல் உள்ளது.

0 comments:
Post a Comment