பள்ளிக்கு செல்லும் கார்த்தி, தமன்னா


கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தோழா’. இதில் கார்த்தி ஜோடியாக ‘பையா’, ‘சிறுத்தை’ ஆகியப் படங்களில் நடித்து அவருக்கு ராசியான ஜோடி எனப் பெயர் எடுத்த தமன்னா நடித்துள்ளார். 

மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாகார்ஜுன் தமிழில் நடித்திருக்கிறார்.ஒரு மாற்று திறனாளிக்கும், மனரீதியாக பெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஒருவனுக்கும் நடக்கும் போராட்டமே 'தோழா' படத்தின் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். 

இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசையை 26ம் தேதி வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த விழாவை கார்த்தி சிறுவயதில் படித்த பள்ளியான சென் பீட்ஸ் பள்ளியில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். தான் சிறுவயதில் படித்த பள்ளிக்கு நாயகி தமன்னாவை கார்த்தி அழைத்து வர இருக்கிறார் என்றும் இந்த பள்ளியில் படிக்கும் சுமார் 2500 மாணவர்கள் முன்னிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பி.வி.பி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை வம்சி இயக்கியிருக்கிறார். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரகாஷ் ராஜ், விவேக், ஜெய சுதா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment