மாப்ள சிங்கம் திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் அலட்டிக்கொள்ளாத கதைகள் என ஒரு சில இருக்கு. நாங்க எந்த கருத்தும் சொல்லலங்க ஜாலியா இரண்டு மணி நேரம் சிரிச்சுட்டு போங்கங்ற டைப் தேசிங்குராஜா, ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பல படங்கள் வந்துள்ளது.அதே பாணியில் வெளிவந்துள்ள படம் தான் இந்த மாப்ள சிங்கம். ஆனால், அதில் சின்னதாக பெண் கல்வி பற்றியும் தூவி விட்டு மசாலா விருந்து படைத்துள்ளனர்.

கதைக்களம்:

ஊரில் இரண்டு பெரிய தலைக்கட்டுக்கள், ராதாரவி, முனிஷ்காந்த். இதில் யார் கோவில் தேரை இழுப்பது என வருடம் வருடம் பிரச்சனை வருகிறது. எப்போதும் போல் இந்த வருடமும் பெரிய பிரச்சனை வந்து கோவில் திருவிழா நிற்கின்றது.ராதாரவியின் தம்பி மகனாக விமல், தமிழ் சினிமாவிற்கு எந்த விதத்திலும் களங்கம் வராமல் வேலைக்கு போகாமல் சூரி, காளி வெங்கட்டுடன் ஊரை சுற்றி வருகிறார்.இந்நிலையில் பெண்கள் வேலைக்கு போகக்கூடாது என வீராப்புடன் வாழும் அவரது சொந்த மகள் மதுமிலாவே, தன் பரம்பரை எதிரியாக கருதப்படும் முனிஷ்காந்த் குடும்பத்தில் இருக்கும் விஷ்ணுவை காதலிக்கிறார்.இதே நிலையில் விஷ்ணுவின் தங்கை அஞ்சலியை விமல் காதலிக்க, இந்த இரண்டு குடும்பத்தினருக்குமிடையே சண்டை எப்படி நீங்கியதா? மதுமிலா விஷ்ணுவை கரம் பிடித்தாரா? விமல் அஞ்சலியை கரம் பிடித்தாரா? என்பதை செம்ம ரகளையாக கூறியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்.படத்தை பற்றிய அலசல்விமல் நமக்கு இந்த ரூட் தான் பாஸ் பெஸ்ட் என்று சொல்கிற அளவுக்கு ஊருக்குள் காலரை தூக்கிவிட்டு, காதலர்களை பிரிப்பது, பின் தனக்கே ஒரு கட்டத்தில் காதல் வர, மதுமிலா காதலை சேர்த்து வைக்க உதவி செய்வது என நீண்ட இடைவேளைக்கு பிறகு களவாணி விமலாக பதிகிறார்.அஞ்சலி போதுங்க இன்னும் எத்தனை படத்துல பசங்கள மிரட்டிற மாதிரியே லவ் பண்ணுவீங்க, எங்கேயும் எப்போதும் அஞ்சலியை நியாபகப்படுத்தினாலும், அந்த க்யூட் இதில் மிஸ்ஸிங்.சூரி, காளி வெங்கட் கிடைக்கிற கேப்பில் எல்லாம் அதகளம் செய்கின்றனர். ஏ செண்டர் ஆடியன்ஸ் என்று சொல்லப்படுபவர்களுக்கு வேண்டுமென்றால் சூரி காமெடி சிரிப்பு வராமல் இருக்கலாம். ஆனால், ஜனரஞ்சக சினிமா ரசிகர்களால் பலரையும் கவர்ந்து இழுத்து விடுகிறார். அதிலும் 'எங்க ஊர்ல கல்யாணத்துக்கு பொண்ணுங்க சம்மதம் கேட்க மாட்டோம், அப்படி கேட்டா ஒரு ஆம்பளைக்கும் எங்க ஊர்ல கல்யாணம் நடக்காது' என தன் வழக்கமான சிங்கிள் பஞ்சில் தூள் கிளப்புகிறார். கூடவே எக்ஸ்ட்ரா போனஸாக காளி வெங்கட்.இவர்களே போதும் என்று நினைத்தால், சுவாமிநாதன் தன் பங்கிற்கு கலக்குகிறார். அதும் மதுமிலா ஓடி போய்விட்டார் என தவறாக கூறிவிட்டு அவர் செய்யும் கலாட்டாக்கள் செம்ம. ராதாரவி தற்போது புல் பார்மில் இருக்கிறார் போல நடிக்கும் அனைத்து படங்களிலும் அசத்துகிறார்.யார் அந்த வெள்ளைக்காரர், தமிழ் எல்லாம் பேசுகிறார் என கிண்டல் செய்தாலும், ' உங்க ஊர்ல வேலையில்லாதவங்க தான் தேர்தல் நிற்பாங்களா' என கேட்டு சூரிக்கே கவுண்டர் கொடுக்கிறார். படம் என்ன தான் ஜாலியாக இருந்தாலும், கதை அப்படின்னு பெரிதாக ஏதும் இல்லை. அதிலும் தேசிங்குராஜா படத்தில் அஞ்சலி, ராதாரவி, காளி வெங்கட் மட்டும் எக்ஸ்ட்ராவாக சேர்த்தது போல் உள்ளது.

க்ளாப்ஸ்:

படத்தின் பலமே காமெடி காட்சிகள், இயக்குனர் ஒரு படையையே இறக்கி சிரிக்கவும் வைத்து விட்டார். ராதாரவியின் அனுபவ நடிப்பு, முனிஷ்காந்தை சீரியஸாக காட்டி பிறகு அவரும் காமெடி அதகளத்தில் இறங்க இப்ப மட்டும் இல்ல ஆரம்பத்திலே இருந்தே நாம தான் தோத்துகிட்டு இருக்கோம்' என தன் பங்கிற்கு கலக்குகிறார்.ரகுநந்தன் இசை குறிப்பாக வேணாம் மச்சா காதலு இந்த வருடத்தின் ஹிட் வரிசை.

பல்ப்ஸ்:

பார்த்து பழகி போன கதை, சிரிக்க வைக்க முயற்சி செய்வது சரி தான், அதற்காக ஒரே ட்ரண்டை பிடித்துக்கொள்வது நியாயமா?மொத்தத்தில் இந்த மாப்ள சிங்கம் பி, சி செண்டர்களில் கர்ஜிப்பார்.

ரேட்டிங்: 2.75/5
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment