ஜித்தன் 2 விமர்சனம்


ஜித்தன் மூலம் அறிமுகம் ஆன ரமேஷ் தன்பெயருடன் இணைத்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு ஒரு break கொடுத்தது அப்படம்.ஆனால்அதன் பின் அவரின் படங்கள்அனைத்தும் தொடர் தோல்விகள்தான். அதனால்மீண்டும் ஒரு பிரேக் கொடுக்கும்முயற்சியே இந்த ஜித்தன் 2. இப்போது தமிழ் சினிமாவில்trend என்ன என்று கேட்டால் அடுத்தவருடம் பிறக்க போகும் குழந்தைகூட சொல்லும் பேய் படங்கள் என்று.அதனால் அதையே ஆயுதமாக எடுத்துகளம் இறங்கிய இந்த ஜித்தனுக்குவெற்றி கிட்டுமா என இந்த விமர்சனத்தில்பார்ப்போம்.

கதை:

படம் ஜித்தன் முதல் பாகத்தின்தொடர்ச்சி போல ஆரம்பிக்கிறது. நாயகன் ரமேஷ்தனது மறைந்த தந்தையின் ஆசையை நிறைவேற்ற ஒருவீடு வாங்குகிறார். ஆனால் அங்கு இருக்கும்ஏதோ அமானுஷ்ய சக்தி ஒன்று நாயகனைஅங்கு தங்க விடாமல் பலதொந்தரவுகள் செய்கிறது. இவரும் அந்த பேயைசமாளிக்க பல முயற்சிகள் செய்கிறார்ஆனால் எதுவும் உதவவில்லை. யார்அந்த பேய்.. எதற்காக இவரைவீட்டில் தங்கவிடாமல் செய்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்:

படத்தில்நடித்த நடிகர்கள் அனைவருக்கும் எந்த வேலையும் இல்லை.ஏனெனில் படத்தின் கதையிலோ, திரைக்கதையிலோ எந்த அழுத்தமோ சுவாரஸ்யமும்இல்லை. இதுபேய் படமாகவும் திகிலூட்டவும் இல்லை, நகைச்சுவையம் workout ஆகவில்லை, சில இடங்களில் ரோபோசங்கரின் வசனங்களும், கருணாஸின் முகபாவனைகளும் சிரிக்க தூண்டுகிறது. வழக்கமான பேய் பட Template கூட இல்லை. ஆனால் ஒன்றுசெய்திருக்கிறார்கள் பேயையே பயப்பட, அழுகவைத்திருக்கிறார்கள் அதுவும் தேவையே இல்லாதகாரணத்திற்கு.படம் ஒரு பக்கம் போய்கொண்டு இருக்க ஸ்ரீ காந்த்தேவாவின் இசை இன்னொரு பக்கம் போகிறது. ஓளிப்பதிவு படத்தொகுப்பு இரண்டும் ரொம்ப சுமார் தான். படத்தின் கிராஃபிக்ஸ் அபத்தம். ஒரு படம் வெற்றிப்படமாக அமைய இயக்குனர் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து கொண்டு காட்சிகள், வசனங்கள் அமைப்பார்கள் அதேபோல் இப்படத்தில் ஒரே ஒருவசனம் மட்டும் ரசிகர்களின் மனதில் உள்ளதை கூறியிருக்கிறார்கள், படத்தின் முடிவில் ரமேஷ் சொல்லும் வசனம் அது, ”அப்பாடா ஒரு வழியா இந்த பேயிடம் இருந்து தப்பித்துவிட்டோம்”மொத்ததில் ஜித்தன் 2 அரங்கத்தில் அலறல் சத்தமும் இல்லை, சிரிப்பொலியும் இல்லை,கொட்டாவி ஒலி மட்டுமே அரங்கத்தை நிறைத்தது!

ரேட்டிங்: 1.5/ 5
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment