ஓய் விமர்சனம்


புதுமுகங்களான கீதன், இஷா, பாப்ரி, அர்ஜுனன் மற்றும் சங்கிலிமுருகன் கூட்டணியில் இன்று வெளிவந்துள்ள படம் "ஓய் ". இளையராஜாவின் இசையில், கமல்ஹாசன் பாடல் வெளியிட, ஆரம்பமே அமர்க்களம் என்றாலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு குறைவு தான்.

கதைக்களம்:

ஜெயில் கைதியான இஷா, பரோலில் தன் அக்காவின் கல்யாணத்திற்காக வெளிவர, பேருந்தில் கீதனை சந்திக்கிறார். கீதனின் நகையை ஒருவன் திருட, அதை வாங்க பேருந்தை விட்டு இறங்கும் இஷா பேருந்தை தவறவிடுகிறார். பிறகு அதை குடுக்க கீதன் ஊருக்கு செல்லும் இஷாவை, கீதனின் காதலி என அவர் குடும்பம் நினைக்கிறது. இஷாவும் சூழ்நிலை காரணமாக அங்கேயே தங்க நேரிடுகிறது. ஆனால் கீதன் காதலிப்பது பாப்ரியை.விஷயம் தெரிந்து கீதன் ஊருக்கு வந்து உண்மையை சொல்லியும் யாரும் நம்பவில்லை. இந்த சமயத்தில் தன் அப்பாவின் மானத்தை காப்பாற்ற சிலம்ப போட்டியில் பங்கேற்கிறார் கீதன். அவர் போட்டியில் வென்று உண்மை காதலியை கரம் பிடித்தாரா ? இஷாவின் நிலைமை என்ன ஆனது ? என்பது தான் மீதிக்கதை .

கிளாப்ஸ்:

கீதன், சங்கிலி முருகன், அர்ஜுனனின் இயல்பான நடிப்பு.

பல்ப்ஸ்:

இளையராஜாவின் இசையா? என்ற சந்தேகம் வருகிறது. பின்னணி இசை சீரியல் effect தருகிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். படத்தில் காமெடி எடுபடவே இல்லை. நிறைய இடங்களில் லாஜிக்கே இல்லை.மொத்தத்தில் 'ஒய்' யாருக்கும் கேட்கவில்லை.

ரேட்டிங்: 2.5/5
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment