கொண்டாட்ட மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்


கடந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக நவம்பர் 10ம் தேதி வெளியான படம் வேதாளம். சிவா இயக்கியிருந்த இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். 

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். படத்தை அஜித் ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வந்தனர். படம் வெளியாகி 25, 50, 75 நாட்கள் அனைத்தும் கடந்து இன்றோடு 100வது நாளை தொட்டிருக்கிறது. 

இதனால் டபுள் சந்தோஷமான ரசிகர்கள் #100DaysOfATBBVEDALAM என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment