சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து வந்த படத்தின் தலைப்பு இன்று வெளிவருவதாக அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று 6 மணிக்கு வெளிவருவதாக இருந்த தலைப்பு 1 மணிநேரத்துக்கு முன்பே இணையத்தில் கசிந்தது. இப்படத்துக்கு ரெமோ (Remo) என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஷங்கரின் அந்நியன் படத்தில் விக்ரம் ஏற்றிருந்த முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் இந்த ரெமோ. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் மற்றும் பலர் நடிக்க சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்களில் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தை இயக்குனர் அட்லியின் துணை இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

0 comments:
Post a Comment