தமிழ் சினிமாவை பேய் பிடித்து ஆட்டுகின்றது. இதற்கு ஒரு எல்லையே இல்லையா? என கேட்கும் அளவிற்கு பேய் ட்ரண்ட் வந்து சென்று விட்டது. இந்நிலையில் வெற்றிக்காக காத்திருக்கும் ஸ்ரீகாந்தையும் இந்த பேய் ட்ரண்ட் விட்டு வைக்கவில்லை.கூடவே ஸ்பெஷலாக ராய் லட்சுமியும் களத்தில் இறங்க பெரிய எதிர்ப்பார்ப்புடன் படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
கதைக்களம்:
தலைவாசல் விஜய்யின் மகன் ஸ்ரீகாந்த், வெளியூரில் வசிக்கும் இவருக்கு ராய் லட்சுமிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றது. அதற்காக தன் ஊருக்கு வருகிறார் ஸ்ரீகாந்த்.வந்த இடத்தில் தலைவாசல் விஜய் வாங்கிய கடனுக்காக ஸ்ரீகாந்தின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சவுகார் பேட்டையை சார்ந்த சேட் சுமன் குடும்பத்தையே கொன்று துவம்சம் செய்கிறார்.இதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்தும், ராய் லட்சுமியும் பேயாக மாறி எப்படி சேட் சுமனை பழி வாங்கினார்கள் என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்ஸ்ரீகாந்த் வெற்றி, சக்தி என இரண்டு கெட்டப்புகளில் தன்னால் முடிந்த நடிப்பை கொடுத்துள்ளார். பேயாகவும் மிரட்டுகிறார்.இவர் ஒரு புறம் இப்படியிருக்க ராய் லட்சுமி கிளாமர் பேயாக ரசிகர்களை கவர்கிறார். இத்தனை அழகான பேயை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் ஏமாற்றம் என்றாலும் பின்னணி இசையில் கலக்கியுள்ளார்.
க்ளாப்ஸ்:
ஸ்ரீகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கியுள்ளார். ராய் லட்சுமியும் கிளாமர்+பேய் மேக்கப் என அசத்துகிறார்.
பல்ப்ஸ்:
பார்த்து பழகி போன பேய்க்கதை, காமெடி காட்சிகள் கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது.மொத்தத்தில் சவுகார் பேட்டை பெரிதாக பயமுறுத்தவில்லை.
ரேட்டிங்: 2.25/5
0 comments:
Post a Comment